பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் கைது

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

ரேடியோ ஜாக்கிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல தெலுங்கு பின்னணி பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பின்னணி பாடகராகவும், ஏராளமான கஜல் பாடல் ஆல்பங்களையும் பாடியுள்ளவர் கஜல் ஸ்ரீனிவாஸ் (51).

இவர் காந்திய கொள்கைகளை பரப்பும் வகையிலான 76 உலக மொழிகளில் கஜல் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஸ்ரீனிவாஸ் ஐதராபாத்தில் இணையதள வெப் ரேடியோ நடத்தி வரும் நிலையில் இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், அவரின் ரேடியோ நிலையத்தில் ஜாக்கியாக இருக்கும் பெண்ணொருவர் ஸ்ரீனிவாஸ் மீது பொலிசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அதில் ஸ்ரீனிவாஸ் தன்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஸ்ரீனிவாஸை கைது செய்த பொலிசார் நீதிமன்ற உத்தரவுபடி 15 நாள் காவலில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்