ரஜினிக்கு ஆதரவாக டுவிட் செய்த ராஜபக்சவின் மகன்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த நாளில் இருந்தே பல பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

சமூகவலைத்தளங்களிலும் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டவுடன் ராஜபக்சவின் மகன் டுவிட் செய்திருந்தார்.

அதில், என் அப்பா ராஜபக்சேவிற்கு விருப்பமான நடிகர்களில் ரஜினியும் ஒருவர். அவர் இப்போது அரசியலுக்கு வந்து இருக்கிறார். இது நல்ல செய்தி. சிவாஜி படத்தில் அவர் மக்களுக்கு நல்லது செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்வது போல செல்லாமல் இருந்தால் சந்தோசம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய கிளை தலைவராக இருந்த ராஜூ மகாலிங்கம் ரஜினியில் கட்சியில் சேர்வதற்காக லைக்காவின் தலைவர் பொறுப்பை துறந்துள்ளார்.

தமிழகம் மட்டும் ஒரு கம்பெனியாக இருந்திருந்தால் அதனுடைய மொத்த பங்கையும் நான் வாங்கி இருப்பேன் என்று கூறியிருக்கிறார் மஹிந்திரா நிறுவன சேர்மேன் ஆனந்த் மஹிந்திரா.

ரஜினியின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது என்பதற்காக இப்படி கூறினாராம்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்