தினகரனுக்கு எதிராக டைம்பாம் வெடிக்கலாம்: எச்.ராஜா தகவல்

Report Print Santhan in இந்தியா
112Shares
112Shares
lankasrimarket.com

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

ஆளும் கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக போன்ற கட்சிகள் தினகரனின் வெற்றியை கண்டு வியந்து போய் உள்ளன.

அதுமட்டுமின்றி இந்த வெற்றிக்கு பின்னர் தினகரன் தமிழக அரசியலில் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவரின் வெற்றி செல்லுமா செல்லாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் அவர் அப்பகுதி மக்களுக்கு பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றார் என்று விமர்சிக்கப்பட்டு வருவதால் இந்த வெற்றி செல்லாது என்று கூட அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியது.

இதற்கிடையில் கடந்த 29-ஆம் திகதி எம்எல்ஏவாக சபாநாயகர் அறையில் தினகரன் பதவியேற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து வரும் 8-ஆம் திகதி நடைபெறவிருக்கும் சட்டசபை கூட்டத்திற்கு தினகரன் செல்லவிருக்கிறார்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது. ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றது தொடர்பாக நாளை இரவுக்குள் டைம்பாம் வெடிக்கலாம் என கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்