15 பொலிசாரின் காலணிகளை நாவால் சுத்தம் செய்த நபர்: கேள்வி கேட்டதால் நேர்ந்த கொடூரம்

Report Print Kabilan in இந்தியா
186Shares
186Shares
lankasrimarket.com

குஜராத் தலித் ஒருவரை பொலிசாரின் காலணிகளை நாவால் சுத்தம் செய்ய வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் அம்ராய்வாடியைச் சேர்ந்தவர் ஹர்ஷத் ஜாதவ், 40 வயதான இவர் சாய்பாபா நகரில் டிவி பழுதுபார்க்கும் வேலையை செய்து வருகிறார்.

கடந்த டிசம்பர் 29ஆம் திகதி சாய்பாபா கோவிலில் கூட்டம் மற்றும் பதட்டமான நிலை இருந்து உள்ளது. அதனைக் கண்ட ஜாதவ், என்ன காரணம் என தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.

அங்குள்ள நபர் ஒருவரிடம் என்ன விடயம் நடக்கிறது என கேட்டுள்ளார். ஆனால், அவர் கேள்வி கேட்ட நபர் வினோத்பாய் எனும் பொலிஸ் என்பது பின்னர் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, வினோத்பாய் எந்த காரணமும் இன்றி ஜாதவ்வை திட்டி அடித்துள்ளார், தடுக்க வந்த ஜாதவின் மனைவி, தாயாரையும் தடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூவரையும் பொலிசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களின் சாதியை கேட்டுள்ளனர்.

அங்கிருந்த 15 பேருடைய காலணியையும், ஜாதவை நாவால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதுடன் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த விடயம் தற்போது வெளியே தெரியவந்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவலர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜாவத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்