உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட 9 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி காரணம்

Report Print Kabilan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

உத்தரபிரதேசத்தில் ஒரு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் உணவுடன் சேர்த்து மது அருந்திய 9 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் தால் குர்த் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில், தால் குர்த் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விருந்தில் உணவுடன் சேர்த்து வீட்டில் தயார் செய்யப்பட்ட மதுவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விருந்து முடிந்த சிறிது நேரத்தில் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுவைக் குடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர் என புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்பட்டால், அதனை விற்பனை செய்த வியாபாரிக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம், உத்தர பிரதேச மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்