சாதனை தமிழன்!!!

Report Print Gokulan Gokulan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

உலகின் மூத்த குடியாக திகழும் தமிழனின் பெருமையை பற்றி எடுத்துரைக்க பல யுகங்கள் தேவைப்படும். அப்படி அனைத்து தமிழர்களும் பெருமைப்படும் அளவிற்கு தன் துறையான ISRO-வில் பணியாற்றி கடின உழைப்பின் மூலமாக சாதித்து இப்போது ISRO அமைப்பின் தலைவராகவும் உருவெடுத்திருக்கிறார் திரு. சிவன் அவர்கள்.

நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள வல்லங்குமாரவிளை என்னும் சிறியதோர் கிராமத்தில் பிறந்த இவர் ”கணினியில் இளம் அறிவியல் பட்டமும்” பின்னர் சென்னையில் உள்ள MIT-யில் ஏரோநாட்டிகல் பொறியியலும் படித்த பிறகு ME ஏரோஸ்பேஸ் படிப்பை பெங்களூரில் கற்றுத்தேர்ந்தார். மேலும் தனது டாக்டரெட் படிப்பை IIT பாம்பேவில் முடித்தார்.

தற்போது Vikram Sarabhai Space Centre-ன் இயக்குனராக இருக்கும் இவர் "ராக்கெட் ஸ்பெசலிஸ்ட்" என அழைக்கபடுவார். இதுமட்டுமல்லாமல் குறைந்த டெம்பரேட்ச்சரில் liquefied gas-கள் மூலம் இயங்கும் cryogenic engine-களை அறிமுகப்படுத்தி அதன் வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைப் படைக்க காரணமாக இருந்தது சிவனின் சாதனையாகவே பரவலாக பேசப்பட்டது. இந்தியாவின் 3 செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக் கோள்களை (பிற நாடுகளின் 28 செயற்கைக்கோள்கள்) இஸ்ரோ விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது கிரன்குமாரின் பதவிக்காலம் ஜனவரி 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் புதிய இஸ்ரோ தலைவராக தேர்வாகியுள்ள சிவன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், தற்போது "தனது முழு மனதும் அடுத்து விண்ணில் ஏவப்படவுள்ள ராக்கெட் குறித்துதான் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த முறை ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்த முறை அதிக கவனம் செலுத்தி வெற்றியை நோக்கி உழைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழனின் புகழ் மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் உரக்க கேட்கும் என்பதை இந்த பதிவு உறுதிப்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்