சிறுமிகளின் ஆடைகளை களைந்த ஆசிரியர்கள்: பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் பள்ளி சிறுமிகளின் ஆடைகளை களைந்து, ஆசிரியர்கள் சோதனை செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது Jobat என்னும் கிராமம். இங்குள்ள அரசுப் பள்ளியில், 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் பணம் ரூ.1000 காணாமல் போயுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வகுப்பில் இரண்டு மாணவிகளின் மீது ஆசிரியர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், அந்த மாணவிகளை தனித்தத் தனியாக அழைத்துச் சென்று, ஆசிரியர்கள் மாணவிகளின் ஆடைகளை களையச் செய்து சோதனை செய்துள்ளனர்.

எனினும், பணம் எதுவும் சோதனையில் கிடைக்கவில்லை. இச்சம்பவத்தினால் இரண்டு மாணவிகளும் மனதளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும், காவல்துறையில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து Jobat காவல் துணை ஆய்வாளர் சங்கர் சிங் ஜாம்ரா கூறுகையில், ’கடந்த திங்கட்கிழமை, பதினொன்றாம் வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், ரூ.1000-ஐ திருடியதாக சந்திகிக்கப்பட்டனர்.

பின்னர், பள்ளி ஆசிரியர்கள் இரு மாணவிகளின் உடைகளை களைந்து சோதனை நடத்தியுள்ளனர். அதன் பின்னர், வேறு ஒரு மாணவியே அப்பணத்தை திருடியது பின்னர் தெரிய வந்துள்ளது.

ஆனால், பள்ளியின் முதல்வர் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், விசாரணைக்கு பிறகே முறையான புகாரை நாங்கள் தாக்கல் செய்வோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்