மக்களிடமே கவலையைத் தெரிவிக்கிறோம்: பரபரப்பை கிளப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை எனக் கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வரலாற்றில் முதன் முறையாக ஊடகங்களை சந்தித்துள்ள சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பதவி வகிப்பவர்கள் ஊடகத்தினரைச் சந்தித்து நிர்வாகம் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

திபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வாய்ப்பில்லை. நிர்வாகம் சரியில்லை. இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுத்தோம்.

ஆனால், எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்துப் பேசினோம். அதன்பிறகு உங்களைச் சந்திக்கிறோம். எங்கள் கவலைகளை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது என்றார்.

உச்ச நீதிமன்றத்தைப் பாதுகாப்பது குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார். என்னப் பிரச்னை என்று நீதிபதிகள் நேரடியாகக் கூறவில்லை.

எனினும் அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருப்பதாக அவர்களின் பேச்சில் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்தத் திடீர் பேட்டி இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்