தொண்டர்களை சந்தித்து வருகிறார் கருணாநிதி: உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

Report Print Harishan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் மு.கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் தினத்தன்று தனது தொண்டர்களை சந்தித்து 10 ரூபாய் நோட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தவர் கருணாநிதி.

ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனால் தொண்டர்கள் வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்தாண்டு கண்டிப்பாக தொண்டர்களை தலைவர் சந்திப்பார் என திமுக தலைமை கூறி வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் தனது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார்.

இதற்காக அவரது இல்லம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் பூங்கொத்து வழங்குவதை தவிர்க்கும்படி தொண்டர்களுக்கு அவரது மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

15 மாதங்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி, தொண்டர்களை சந்தித்து வருவதால் ஏராளமான தொண்டர்கள் குவியக்கூடும் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்