மது ஊற்றிக் கொடுத்து வெட்டிக் கொன்றது ஏன்? குற்றவாளியின் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

சென்னையில் தொழில் போட்டி காரணமாக முன்னாள் முதலாளியை ஆறு இளைஞர்கள் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த யூசப் என்பவரின் மகன் ஷாஜஹான்(வயது 27), எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி புறநகர் ரயிலில் விற்பனை செய்து வருகிறார்.

இவரிடம் விமல் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வேலை விட்டு நின்றதுடன், சொந்தமாக தொழிலை தொடங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷாஜஹான் தன் தொழிலை பாதிக்கும் வகையில் உள்ளது என எச்சரித்துள்ளார்.

இதில் கோபமடைந்த விமல், தன் நண்பர்களுடன் சேர்ந்து ஷாஜஹானை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்நிலையில் கடந்த 8ம் திகதி ஷாஜஹானிடம் சகஜமாக பேசிய விமல், கும்மிடிப்பூண்டி துணை மின்நிலையம் அருகே உள்ள ரயில் பாதைக்கு வருமாறு கூறியுள்ளார்.

அவரும் நம்பி வரவே, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார், சம்பவ இடத்திலேயே ஷாஜஹான் உயிர் பிரிந்தது.

ஷாஜஹானின் உடலை அங்கேயே புதைத்துவிட்டுச் சென்றனர், பொலிஸ் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் கும்மிடிப்பூண்டி விஏஓவிடம் சரணடைந்துவிட்டனர்.

ஐந்து பேரை கைது செய்துள்ள நிலையில், ஆறாவது நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

குற்றவாளிகள் அளித்த தகவலின் பேரில், ஷாஜஹானின் உடலை பொலிசார் கைப்பற்றினர், 22 இடங்களில் கத்திக்குத்து இருந்ததும், கழுத்து அறுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

உடலை கைப்பற்றிய பொலிசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

தொழில் முன்விரோதத்தின் காரணமாக ஷாஜஹானை விமல் நண்பர்களுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்