தேர்தலில் எதிர்த்து வாக்களித்ததால் ஆத்திரம்: 13 வயது சிறுமி கற்பழித்து கொலை

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், தேர்தலில் எதிர்த்து வாக்களித்த ஆத்திரத்தில் அண்டை வீட்டாரின் 13 வயது சிறுமியை வேட்பாளரின் உறவினர்கள் கற்பழித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் ராஞ்சியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 8-ஆம் திகதி காலைக்கடனை கழிக்க குடியிருப்பில் இருந்து வெளியேறிய சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து தமது மகளை காணவில்லை என அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.

உடற்கூறு ஆய்வில், சிறுமி கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும், சித்திரவதைக்கு பின்னர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் Premlal Hansda என்பவரையும் அவரது உறவினர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

Premlal Hansda-வின் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதாகவும், ஆனால் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அவருக்கு வாக்களிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பழி வாங்கியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்