மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களம் கண்ட 240 காளைகள்! 40 பேர் படுகாயம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பொங்கள் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் 240 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் காளைகள் முட்டியதில் 40 மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் உற்சாகத்துடன் தமிழக அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

முதலாவதாக ஊர் மரியாதையை ஏற்கக்கூடிய கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஜல்லிக்கட்டு தொடங்கி 1 மணி நேரத்தில் 83 காளைகள் களத்தில் விளையாடி உள்ளன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிவரும் காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த வருடத்தை விட இவ்வருடம் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டது.

சோதனைகளைக் கடந்து 954 காளைகளும், 623 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்ட்டில் மதியம் மதியம் 12.45 மணி நிலவரப்படி 240 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி மாடுகள் முட்டி இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்