திருமணமான சில மாதங்களிலேயே தனது குடும்பத்தினருடன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா
1145Shares
1145Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகையன்.

இவரது மகன் கண்ணன்(வயது 55) மளிகை கடை நடத்தி வருகிறார், இவரது மனைவி குணசுந்தரி, மகள் சரண்யா மற்றும் சுகன்யா.

வீட்டின் கீழ்தளத்தில் கடையும், மேல்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

மகள் சரண்யாவுக்கும், விக்னேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சரண்யா விக்னேஸ்வரனுடன் சண்டை போட்டு அப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விக்னேஸ்வரன் தனது மனைவியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இவர்கள் இருவருக்குள்ளும் கடும் வாக்கும்வாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் கண்ணன் கடை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கே நால்வர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு பொலிசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக விக்னேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விசாரணை நடத்தி பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்