பயணிகளின் சிக்கனை எடுத்து சாப்பிட்ட விமான பணிப்பெண்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியின் ஸ்பின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

வீடியோவை விட, அந்த வீடியோவுடன் சேர்த்து அவர் வெளியிட்டு பதிவு தான் கொமடியாக உள்ளது. வீடியோவில், விமான பணிப்பெண் ஒருவர், பயணிகளின் உணவை எடுத்து சாப்பிடுகிறார்.

இந்த வீடியோவுடன் சேர்த்து அவர், விமானத்தில் பயணம் செய்யும் போது நீங்கள், சாப்பிடும் தட்டி சிக்கன் துண்டுகள் குறைந்துவிட்டால், விமான நிறுவனத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையாக என்று நினைக்கவேண்டாம்.... ஆனால் வேறு ஏதாவது நடந்திருக்கலாம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த சம்பவம் எந்த விமானத்தில் நடந்தவை என்பது குறித்த தகவல்கள் இல்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்