புதுச்சேரியில் சிக்கிய சென்னை சங்கிலி கொள்ளையன்

Report Print Kabilan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

சென்னையில் பெண்ணிடம் சங்கிலி பறித்த கொள்ளையன் தற்போது புதுச்சேரியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை குன்றத்தூரில் கடந்த 10ஆம் திகதி, ஜெயஸ்ரீ என்னும் பெண் தன் கணவர் அசோக் குமாருடன் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவரின் பின்னே வந்த இளைஞன், ஜெயஸ்ரீயின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.

இதில், ஜெயஸ்ரீ கீழே விழுந்துள்ளார், கொள்ளையனைப் பிடிக்க அசோக் குமாரு முயன்றும், கொள்ளையன் தப்பியுள்ளான். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியது.

இதனைத் தொடர்ந்து, பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புதுச்சேரியில் அந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான்.

அவனின் பெயர் சிவா என்பதும், அவனின் கூட்டாளி சாலமன் என்பது தெரியவந்துள்ளது. எனினும், சாலமன் இன்னும் பொலிசாரிடம் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்