இனி நடிக்கப் போவதில்லை: கமல்ஹாசன் அதிரடி

Report Print Harishan in இந்தியா
554Shares
554Shares
lankasrimarket.com

நடிகர் கமல்ஹாசன் இனி தான் நடிக்கப் போவதில்லை என்றும், தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் புதிய அரசியல் கட்சியின் பெயரையும், அதன் கொள்கைகள் குறித்தும் அறிவிக்க உள்ளதாக சமீபத்தில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்ந்த ராமேஷ்வரம் இல்லத்தில் இருந்து தனது அதிகாரப்பூர்வ அரசியல் தொடக்கத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த கமல் வழங்கிய பேட்டி ஒன்றில், “என் நடிப்பில் வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை. இனி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் 21-ஆம் திகதி ராமேஷ்வரத்தில் தன் பயணத்தை தொடங்கவுள்ள கமல், மதுரை பொதுக்கூட்டத்தில் கட்சிப் பெயரையும் கொள்கையையும் அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்