சில வாரங்களில் இளைஞருக்கு திருமணம் : தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டில் திருமணத்தில் விருப்பமில்லாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (27) இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சந்தோஷ்குமார் குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் உயிரிழந்தார். இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் அவர் பெற்றோருக்கு எழுதிய கடிதம் சிக்கியது.

அதில், நான் மிகுந்த மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என எழுதியிருந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் சந்தோஷ்குமாருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தில் சந்தோஷ்குமாருக்கு விருப்பம் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்