தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் திருப்பதியில் வலம் வந்த ராஜபக்ச

Report Print Harishan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

திருப்பதிக்கு வருகை தந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள மஹிந்த ராஜபக்ச, நேற்று மதியம் சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா வந்தடைந்தார்.

அங்கிருந்து காரில் திருப்பதிக்கு சென்றவர், இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன பீடத்தில் ஏழுமலையானை தரிசித்த மஹிந்தவுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தரிசனத்தின்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையை மஹிந்த அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்