கட்சியில் சேர்ந்துவிட்டதாக தமிழிசைக்கு மெயில் அனுப்பிய கமல்: உறுப்பினர் சேர்க்கையில் மோசடி

Report Print Harishan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

கமல் கட்சியில் இணைந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு வந்துள்ள இமெயில் கடிதம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ என்னும் புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கினார். அந்த கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையின் இமெயிலுக்கு,‘உறுப்பினர் சேர்க்கை முடிந்துவிட்டது. நீங்களும், நானும் நாமானோம். நாளை நமதே’ என்ற வாசகங்கள் அடங்கிய கடிதம் ஒன்று வந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழிசை, நான் ஏன் அவர் கட்சியில் சேரப்போகிறேன். இப்படிப்பட்ட அப்பட்டமான, பொய்யான கட்சியை நடந்தி வருகிறார் கமல். கையில் கிடைத்த இமெலுக்கு எல்லாம் மெயில் அனுப்பி வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரி, ஒரு மாநில தலைவர் எப்படி கமல் கட்சியில் உறுப்பினராக முடியும்? என கேள்வி எழுப்பியதுடன், மோசடி நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்