குரங்கணி தீ விபத்து: சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தேனியின் குரங்கணி வனப்பகுதிக்கு சென்ற போது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறிகள் இல்லை என சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கமளித்துள்ளது.

போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக பலர் சென்ற நிலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்து குறித்து விளக்கமளித்துள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப், குரங்கணி வனப்பகுதிக்கு சென்ற போது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறிகள் இல்லை.

11-ஆம் திகதி மலையிலிருந்து கீழே இறங்கும் போது தான் விவசாயிகள் தீவைத்துள்ளனர்.

இது போன்ற அறுவடை காலங்களில் தீவணங்களையோ அல்லது புற்களையோ அவர்கள் கொளுத்தியிருக்கலாம், இதனால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம்

சனிக்கிழமை தங்களின் குழு மலையேற்றத்தை தொடங்கி அங்கு மாலை சென்றதாகவும், அடுத்தநாள் ஞாயிறு காலை திரும்பும் போது தீ எரிந்துள்ளது தெரியவந்தாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது தன்னார்வ குழு எனவும் இதில் இருப்பவர்கள் தாங்களாகவே இது போன்ற பயணங்களை மேற்கொள்கிறார்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதில் இருப்பவர்கள் அனைவரும் முறையான பயிற்சி பெற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிரெக்கிங் கிளப்பின் விளக்கத்தை வைத்து பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்