கல்யாணத்தில் நடனம் ஆடிய மனைவியை கொலை செய்த கணவன்

Report Print Santhan in இந்தியா
1004Shares
1004Shares
lankasrimarket.com

இந்தியாவில் திருமணத்தின் போது மனைவி நடனமாடியதால், அப்பெண்ணின் கணவர் அவரை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி சப்னா-சுபீர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

சுபீர் திருமணத்திற்கு பின் சப்னாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனையே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் உறவினரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற போது சப்னா நடனமாடியுள்ளார். வட இந்திய திருமணங்களில் பெண்கள் நடனம் ஆடுவது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

ஆனால் சுபீரோ இவரை நடனமாடக் கூடாது என்று கூறியதுமட்டுமின்றி, அவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக அவர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

அதன் பின் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிய பின், இரவோடு இரவாக சப்னாவை, சுபீர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சுபீரின் தாயாரும் உடந்தை.

சப்னாவை கொலை செய்த பின் இருவரும் தற்கொலை நாடகமாடியுள்ள்னர். ஆனால் பொலிசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்