வேகமாக பரவும் வீடியோ காட்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

டெல்லியில் டார்ச் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இந்தியாவில் வைரலாகி வருகிறது.

Saharsa மாவட்டத்தில் உள்ள Sadar மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் சாலை விபத்தில் காயமடைந்த காரணத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் படுத்திருக்க, மற்றொரு பெண் டார்ச்சை ஆன் செய்து வைத்துக்கொண்டிருக்கிறார், டார்ச்சிலிருந்து வரும் வெளிச்சத்தை பயன்படுத்தி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வேகமாக பரவியதையடுத்து இந்திய மருத்துவம் எதை நோக்கி செல்கிறது, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா என பல கருத்துக்கள் எழுந்துள்ளன.

ஆனால், இவ்வாறு நடப்பது இது ஒன்றும் முதல்முறை கிடையாது, Jhansi என்ற நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காட்சி வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்