ஐபிஎல் போராட்டம்: இயக்குனர் வெற்றி மாறன் மீது பொலிசார் தடியடி

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

காவிரி மேலாண்மை அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகமெங்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐபிஎல்-க்கு போட்டிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே பல்வேறு அமைப்பினர், பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடையை மீறி மைதானத்தை நோக்கி ஓடி வந்தனர்.

அப்போது இயக்குனர் வெற்றி மாறன் மீது பொலிசார் தடியடி நடத்தியதாக தெரிகிறது, இதனால் அவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரதிராஜா, வைரமுத்து, வெற்றிமாறன், சீமான் உட்பட ஆயிரக்கணக்கான நபர்கள் அண்ணாசாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்