மீண்டும் பிறந்துவிட்டாள் ஆஷிபா: கேரளா நபருக்கு குவியும் பாராட்டு

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

காஷ்மீரில் மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆஷிபாவின் பெயரை தனது மகளுக்கு சூட்டியுள்ளார் கேரள பத்திரிக்கையாளர்.

காஷ்மீரின் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா, பொலிஸ் அதிகாரி உட்பட எட்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் ராம் தனது மகளுக்கு ஆஷிபா ராஜ் என பெயர் சூட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், எனது மகளுக்கு என்ன பெயர் சூட்டுவது என இணையதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது தான் ஆஷிபா செய்தியை கேட்டு மனம் நொந்து போனேன்.

என்னுடைய முதல் குழந்தைக்கு ஏழு வயதாகிறது, இந்த நிலை என் குழந்தைக்கு வந்தால் என்னவாகும் என ஒரு நிமிடம் யோசித்தேன்.

இரு பெண் குழந்தைகளின் தந்தையான நான் நிம்மதியை இழந்து விட்டேன், எனவே அவளது நினைவாக என் குழந்தைக்கு ஆஷிபா ராஜ் என பெயர் சூட்டினேன்.

இதுகுறித்து என் மனைவியிடம் சொன்ன போதும் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டதும் வைரலாகியதுடன் இதுவரையிலும் 15,000 பேர் ஷேர் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்