சிறுமி ஆஷிபா கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம் !

Report Print Athavan in இந்தியா
1849Shares
1849Shares
lankasrimarket.com

சிறுமி ஆஷிபா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதாரங்களாக கருதப்பட்ட அனைத்து புகைபடங்களும் அழிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து தான் ஆஷிபா வழக்கில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

கஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா கொலை வழக்கில் காவல் துறையினர் உட்பட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் காவல்துறையினரே குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் ஆஷிபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கை நேர்மையான முறையில் விசாரிக்க குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் கஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி.

பொதுவாகவே சிக்காலான பல வழக்கை சிறப்பாக விசாரணை நடத்தி குற்றத்தை உறுதி செய்வதில் வல்லவர் என பெயர் எடுத்த ரமேஷ் குமார் ஜல்லாவினால் இந்த வழக்கில் அப்படி அதிரடி காட்ட முடியவில்லை.

ஏனெனில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டுவதில் சிக்கல் இருந்தது. அவற்றை எல்லாம் தாண்டி மிகவும் சாதுரிமாக செயல்பட்ட காவல்துறையினர் ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினர்.

இதற்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்த பொலிஸாரின் தகவல் படி பர்வேஷ் குமார் எனும் 15 வயது சிறுவன் குற்றம் செய்ததாக கூறப்பட்டது.

இதற்காக சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவனும் இதை ஒப்புக்கொண்டான். இந்நிலையில் தான் ஆஷிபா உடலை மீட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விசாரணைக்குழு பார்த்துள்ளது.

அதில் ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டும் ஆஷிபா உடலில் சேறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மற்ற புகைப்படங்களை பார்த்த போது அதில் எந்த புகைப்படத்திலும் சேறு இல்லை.

இதை அடிப்படையாக வைத்து விசாரித்த பின்னர் தான் அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தது. சிறுமியை கோவிலில் வைத்து பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது.

அந்த புகைப்படம் தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்து அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய காரணமாக அமைந்தது என விசாரனை அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்