கத்துவா வன்கொடுமை, சூரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத சிறுமி சித்திரவதை செய்து கொலை ஆகிய சம்பவங்கள் நாட்டையே உலுக்கிவருகின்றன.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு சிறுமியின் உடல், ஹரியானா மாநிலத்தில் பையில் சுற்றப்பட்டு வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள திடொளி எனும் கிராமத்தில் வாய்க்கால் ஒன்றில் மிதந்த பையை நீண்ட நேரமாக நாய்கள் சில கடித்து இழுத்தவாறு இருந்துள்ளது.
இதை கவனித்த அந்த கிராமத்து மக்கள் அருகில் சென்று நாய்களை விரட்டிவிட்டு அந்த பையை திறந்து பார்த்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பையில் 9 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் இருந்தது. உடனே பொலிசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சிறுமியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததாகவும், ஒரு வாரத்திற்கு முன்பே சிறுமியின் சடலத்தை கால்வாயில் வீசியிருக்கக்கூடும் என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.