இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெயரை ஆபாச தளங்களில் பலர் தேடியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி மிகக் கொடூரமாக பலாத்காரத்திற்கு உட்படுத்தி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்வலைகலைகளை ஏற்படுத்தியது.
பெருவாரியான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி குறித்த சிறுமிக்கு நீதி வேண்டும் எனக் கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பயனாளர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
As received! The rape of an 8 year old child is trending on Indian porn sites. How messed up is this world? #JusticeForAsifa #Asifa #rape #KathuaMurderCase pic.twitter.com/G7CDrwsSAH
— Ursula🌈 (@Ubfreaky) April 16, 2018
அதில், சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும் சம்பவமாக மாறியுள்ள சிறுமியின் பெயரானது பிரபல ஆபாச தளத்தில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளதா என்பதையே குறித்த ஆபாச தளத்தில் அதன் பயனாளர்கள் தீவிரமாக தேடியுள்ளனர்.
தேசமே குறித்த கொடூர சம்பவத்திற்காக துக்கப்படும் நிலையில் வக்கிர கும்பலொன்று தொடர்புடைய காணொளிக்காக தேடியுள்ளது சமூக வலைதள பயனாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.