13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணை திருமணம் செய்து வைத்தது எதனால்? வெளியான காரணம்

Report Print Santhan in இந்தியா
1480Shares
1480Shares
lankasrimarket.com

இந்தியாவில் 13 வயது சிறுவனை 23 பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதிலும் இந்த திருமணம் பெற்றோரின் சம்மதத்துடனே நடந்ததாக கூறப்பட்டதால், எப்படி சம்மதித்தார்கள் என்ற கேள்வி பலருக்கு எழுந்த நிலையில் பெற்றோர்கள் குறித்த திருமணத்திற்கு பிறகு தலைமறைவாகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் கூறுகையில், சிறுவனின் தந்தை ஒரு குடிகாரர். அவர் இறந்துவிட்டதால், அதன் பின் குடும்பத்தை பார்த்து கொள்ள யாருமே இல்லை என்ற கவலையில் சிறுவனின் தாய் இருந்ததாகவும், அவர் தான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இவர்கள் குடும்பத்தில் இரண்டு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் அவர் 13 வயதுடைய மூத்த மகனுக்குத் தான் திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும், இதனால் அவர் கர்நாடகாவில் இருக்கும் உறவினர்கள் மூலம் பெண் தேடியதாகவும், அதன் பின் இரு குடும்பத்தினரும் ஒத்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்னரே இந்த திருமணம் நடைபெற்றதாக கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து தாசில்தார் ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், சட்டப்படி இந்த திருமணம் ரத்து செய்யப்படும். பெற்றோர்கள் மணப் பெண் மற்றும் மணமகனை இரண்டு நாட்களில் ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்