எங்களை கருணை கொலை செய்யுங்கள்: கண்ணீருடன் வந்த சகோதரிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
1128Shares
1128Shares
lankasrimarket.com

தங்களது சொந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர் கண்ணீர் மல்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் எல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 12 சென்ட் நிலம் உள்ளது.

அவரது வாரிசுகளான ஜெயலட்சுமி, கன்னியம்மாள், சாரதா ஆகியோர் அந்த நிலத்திற்கு உரியவர்கள் என்ற நிலையில், சக்கரவர்த்தி என்பவர் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்திற்கு உரிமைக் கொண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தாலும், சக்கரவர்த்தி ஆயுதப்படை காவலர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வீட்டையும், சொத்தையும் மீட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது தங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்