கர்நாடக முதல்வராக பதவியேற்க இருக்கும் குமாரசாமி சொத்து மதிப்பு எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in இந்தியா
756Shares
756Shares
lankasrimarket.com

கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து முதல்வராகக் குமாரசாமி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி அமைப்பது குறித்து குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தரப்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் காலஅவகாசம் கொடுத்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடாவின் மகன் ஜனதா தள கட்சி தலைவர் எச்டி குமாரசாமி தான் கர்நாடக முதல்வர் வேட்பாளர்களில் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆவார்.

குமாரசாமிக்கு அடுத்த இடத்தில் சித்தராமையாவும், பாஜக மாநில தலைவரான பிஎஸ் எடியூரப்பாவும் அதிகச் சொத்துக்களை வைத்திருந்தனர்.

2013-ம் ஆண்டுத் தேர்தலில் நின்ற போது 16 கோடியாக இருந்த குமாரசாமியின் சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டு 43 கோடியாக உயர்ந்து இருந்தது.

குமாரசாமி மனைவி பெயரில் 2013-ம் ஆண்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில் 2018-ம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்த போது இவரது சொத்து மதிப்பு 124 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது.

ஜேடிஎஸ் மாநில தலைவரான குமாரசாமிக்கு 2.9 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், அவரது மனைவிக்கு 8.1 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்