கணவரை பிரிந்து அவர் அண்ணனை திருமணம் செய்த மனைவி: ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் கணவரை பிரிந்து சென்று அவர் அண்ணனை மனைவி திருமணம் செய்த நிலையில் ஆத்திரத்தில் அவர்களின் குழந்தையை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த ரீமா என்ற பெண்ணுக்கு கடந்த 2013-ல் கலீம் என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் கலீமும் அவர் பெற்றோரும் ரீமாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் ரீமாவை பணத்துக்காக விற்கவும் கலீம் முயன்றுள்ளார்.

பின்னர் கலீமின் அண்ணன் சலீம் ரீமாவை மீட்டு திருமணம் செய்து அவருடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.

ரீமாவின் வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு ஷகில் என பெயர் வைத்தனர். இந்நிலையில் ரீமா தன்னை பிரிந்து சென்றுவிட்டதால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த கலீம் அவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்று குழந்தை ஷகிலை கடத்தி சென்றுள்ளார்.

பின்னர் ஷகிலை கால்வாயில் தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் கலீமை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு தண்டனையை நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் சலீம் - ரீமா தம்பதிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அதற்கு பிலால் என பெயர் வைத்துள்ளனர்.

ரீமா கூறுகையில், கலீமுக்கு தண்டனை கிடைத்தது மகிழ்ச்சி தான், ஆனால் இன்னும் அவர் குடும்பத்தார் என்னை மிரட்டி வருகிறார்கள்.

என் மகன் பிலாலுக்கு அவர்களால் ஆபத்து வருமோ என அஞ்சுகிறேன், அதனால் தான் அவனை தனியாக விடுவதில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்