லட்சம் விலை கொண்ட சொகுசு காரில் குப்பை அள்ளிய நபர்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

70 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் காரில் குப்பை அள்ளிய இளம் மருத்துவர் ஒருவர், பாலிவுட்டின் சீனியர் நடிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தூய்மை இந்தியா இயக்கம் குறித்த சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்த அபினித் குப்தா தோல் மருத்துவராக இருந்து வருகிறார்.

கடந்த ஜூன் 10ஆம் தேதி இவர் தனது 70 லட்ச ரூபாய் மதிப்பிலான மஞ்சள் நிற DC Avanti சொகுசு காரில் நகர் முழுக்க வலம் வந்து அங்கு சாலையில் கிடந்த குப்பைகளை அள்ளியுள்ளார்.

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் மீது அதிக ஈர்ப்புகொண்ட மருத்துவர் அபினித், தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே தீவிரமாக ஏற்படுத்தவே தனது காரின் பின்பகுதியில் குப்பையை சேகரிக்கும் தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு காரில் சென்று குப்பைகளை அள்ளியதாக தெரிவித்துள்ளார்.

போபால் நகர மக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கையோடு, அதனை நாடு முழுவதும் மேற்கொள்ளும் முயற்சியாக தான் விலையுயர்ந்த காரில் குப்பை அள்ளும் வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை சவாலாக எடுத்துக்கொள்வோம் என்று அதில் கூறியுள்ள அபினித், விலையுயர்ந்த கார்கள், பைக்குகளின் உதவியுடன் நகரை தூய்மைப்படுத்துவோம் என்றார்.

பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், மற்றும் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராத் கோலி ஆகியோரை தனது பதிவில் டேக் செய்துள்ள மருத்துவர் அபினித், உங்களுக்கு சவால் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்