வெள்ளத்தில் அடித்து சென்ற கேரள தம்பதி: தீயணைப்பு துறை காப்பாற்றிய சம்பவம்

Report Print Trinity in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

கேரளாவில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட கேரள தம்பதியினரை தீயணைப்பு துறையினர் போராடி காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி வழியே கேரளாவிற்கு செல்லும் பவானி ஆறு மீண்டும் தமிழகத்திற்குள் வருகிறது.

இந்த வெள்ளத்தால் கேரளா அட்டாவடி பகுதியில் தரைப்பாலத்திற்கும் மேலாக நீர் சென்று கொண்டிருக்கிறது.

இதனிடையில் இன்று காலை சாவடியூர் தரைப்பாலத்தை கடக்க முயன்ற தம்பதி ஒருவர் நீரில் அடித்து சென்றுள்ளனர்.

தகவல் வந்தவுடன் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரும் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மரங்களில் சிக்கி கொண்டு இருந்த தம்பதியை கயிறு கட்டி மீட்டு உடனடி முதலுதவி அளித்தனர்.

மீட்கப்பட்ட தம்பதி தற்போது மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்