பிரியாணியில் லெக் பீஸ் இல்லை: ஹொட்டல் அதிபர் மனைவியின் விரல்களை வெட்டிய ரவுடிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

திருநெல்வேலியில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாத காரணத்தால் ஹொட்டல் அதிபர் மனைவி கை விரல்களை வெட்டி ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர்.

ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஹொட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர் கும்பல், பிரியாணி வாங்கிச் சென்றனர்.

கோபால சமுத்திரத்தில் தாமிரபரணியில் குளித்துவிட்டு, மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை என ஆத்திரமுற்றனர்.

அங்கிருந்து கிளம்பிய கும்பல், சுத்தமல்லி ஹொட்டலுக்கு வந்தனர். அங்கு ஜாகீர் உசேனின் மனைவி பானு இருந்தார். அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டினர்.

இதில் அவரது இடது கை விரல் துண்டிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த ஜாகீர் உசேன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வலது கையின் நான்கு விரல்களை துண்டித்தனர். ‛லெக் பீஸ் வைக்கமாட்டாயா' என கேட்டு அவரது காலிலும் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.

காயமுற்ற இருவரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்