விழியிழந்தவருக்கு ஒளியான சிறுமி: நெகிழ வைக்கும் பிரியத்தின் கதை

Report Print Trinity in இந்தியா
102Shares
102Shares
lankasrimarket.com

உறவுகளுடன் வாழ்வதை விட அவர்களை பிரிவதே நலம் என பல்வேறு உறவுகள் நீதிமன்ற வாசல்களிலும் முதியோர் இல்லங்களிலும் கிடந்து தவிக்கின்றன.

இதில் ஒரு சிறுமி தனக்கு முன் பின் உறவாகாத ஒரு பார்வையற்ற முதியவரின் பாதையில் வழித்துணையாக வந்து உதவிக் கொண்டிருக்கிறார்.

இந்த சிறுமியின் உதவிகளை பார்த்த மற்றவர்கள் அம்முதியவருக்கு மேலும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

முதியவர் நல்லப்பன் என்பவர் தனிமையிலும் வறுமையிலும் தனது முதுமையை கழித்துக் கொண்டிருப்பவர். உறவினர் இருந்தாலும் தனது வேலைகளை தானே செய்து வாழ்ந்து வரும் தன்னம்பிக்கை கொண்டவர். இவருக்கு மாதா மாதம் வரும் அரசாங்க உதவித்தொகை தவிர வேறு வசதியில்லை.

சேலம் டால்மியா நகரை சேர்ந்த இவருக்கு சொந்த வீடு இல்லை. ஒரு பாழடைந்த குடிசையில் வசித்து வருகிறார். தனது மாதாந்திர உதவி தொகை பெற 3 கிமி தூரம் நடந்துதான் வர வேண்டும்.

அதுபோன்று அவர் தனியாக வருகையில் அவருக்கு கிடைத்தது சிறுமி தீட்சா வின் பிரியம். தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் தீட்சா முதியவர் மேல் இரக்கப்பட்டு அவருக்கான உதவிகளை செய்ய ஆரம்பித்தார்.

தன்னை நேசிக்கின்ற ஒரு நெஞ்சத்தின் முகத்தை காண முடியாவிட்டாலும் நல்லப்பன் தீட்சாவை தனது தாயாகவே தனது உணர்வுகளால் உணர்ந்திருக்கிறார்.

தாத்தாவிற்கான மதிய உணவு கொண்டு வருவது , அவரை கைபிடித்து அழைத்து செல்வது போன்ற உதவிகள் செய்து வந்த தீட்சா ஒருமுறை நல்லப்பனின் குடிசையை கண்டார். எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருக்கும் அந்த குடிசையினை தன்னால் முடிந்தவரை மாற்றியமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து தீட்சா செய்து வரும் வேலைகளை பார்த்த அக்கம்பக்கத்து மக்கள் அவர்களும் அந்த வேளையில் தங்களை இணைத்து கொண்டனர்.

வெகு சீக்கிரத்தில் முதியவரின் இன்றைய நிலைமை மாறும் என்பது நிச்சயமாக தெரிகிறது.

பார்வையிருந்தும் இதயமற்றவர்களாக வாழும் பலரை விட இதயம் மட்டுமே பிரதானமான உறுப்பாக கொண்டுள்ள தீட்சா மற்றும் நல்லப்பன் இந்த உலகில் விழும் மழைத்துளிகளுக்கு பொறுப்பாகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்