மகளின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை: சத்தம் போட்டு கதறிய மகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
8Shares
8Shares
lankasrimarket.com

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது அழகு நிலையம் சென்ற தாய் ஒருவர் தாய் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

அழகு நிலையத்தில் இருந்து வெளியே வந்த தாய் மற்றும் மகள், தங்கள் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்தக் கும்பல் இருசக்கர வாகனத்தில், கையில் ஹாக்கி பேட்டுகளுடன் கூச்சலிட்டு வந்துள்ளனர்.

அவர்களைக் கண்டதும், தனது மகளை அழைத்துக்கொண்டு அப்பெண் ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் அதற்குள் அந்தக் கும்பல் அவர்களை மடக்கிப்பிடித்து அடிக்கத் தொடங்கியுள்ளது. தாய் தாக்கப்படுவதைக் கண்டு மகள் சத்தம் போட்டு கதறியுள்ளார்.

ஆனால் மகளை தாக்கி தள்ளிவிட்ட அக்கும்பல், ஹாக்கி பேட்டால் தாயை சரமாரியாக தாக்கியுள்ளனர். மகளின் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த இக்கொடுமை தொடர்பாக, லக்னோ காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட பெண் கூறுகையில், எங்களுக்கு 3 பேருடன் பிரச்னை உள்ளது. அவர்கள் என் மீது ஏற்கனவே பொய்யான திருட்டு புகார் ஒன்றை பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் தான் என்னை தாக்கியிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினார்.

தற்போது தாய் மற்றும் மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்