8 முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு: நகர முடியாமல் தவித்த வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா
442Shares
442Shares
lankasrimarket.com

கர்நாடகாவில் 8 முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு நகரமுடியாமல் தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில், உடுப்பி மாவட்டம் ஹவானா பகுதியில் உள்ளமல்லிகார்ஜுன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு, அங்கிருந்த கோழியினை கடித்து கொன்றதோடு, அடைக்கு வைத்திருந்த 8 முட்டைகளையும் விழுங்கியது.

இதனையடுத்து அதிகமான எடையின் காரணமாக அங்கிருந்து நகரமுடியாமல் பாம்பு தவித்துள்ளது.

இதற்கிடையில் வீட்டின் உரிமையாளர் மல்லிகார்ஜுன், தீ அணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பாம்புபிடி நிபுணர் ராஜகோபாலாச்சார்யா, லாவகமாக பாம்பினை பிடித்து சாலையில் கொண்டு வந்து விட்டார்.

அப்போது பாம்பு விழுங்கிய 8 முட்டைகளையும் வெளியில் கக்க ஆரம்பித்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்