14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா
127Shares
127Shares
lankasrimarket.com

இந்தியாவில் 14 வயது சிறுமி ஒருவர், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதெச மாநிலம் குண்டிபூரா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்த 6ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இரவு நீண்ட நேரமாகியும் குறித்த சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், பொலிசில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், அப்போது மஹுவா தோலா எனும் பகுதியில் சிறுமி மயங்கிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக சிறுமியை மீட்ட பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், மோகித் பரத்வாஜ்(22) மற்றும் ராகுல் போண்டே ஆகிய இளைஞர்கள் அவர்களது வீட்டிற்கு கடத்தி சென்று இரவு முழுவதும் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

அதன் பின்னர், மறுநாள் தன்னை வெளியே செல்லவிட்ட நிலையில், பண்டி பாலவி(23) மற்றும் ரகுவான்ஷி(25), அமித் விஷ்வகர்மா(21) என மேலும் மூன்று இளைஞர்கள் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த தன்னை, மீண்டும் ராகுல் போண்டே வீட்டிற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, விரைந்து செயல்பட்ட பொலிசார் குறிந்த 5 நபர்களை கைது செய்து, அவர்களின் மீது கடத்தல், கூட்டு பலாத்காரம், தவறான நோக்கத்திற்காக அடைத்து வைத்தல் மற்றும் குற்றம் சார்ந்த அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறித்த சிறுமிக்கு 14 வயது என்பதால், போக்ஸோ சட்டத்தின் கீழும் அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்