திருடுவதற்கு முன் குத்தாட்டம் போட்ட திருடன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா
74Shares
74Shares
lankasrimarket.com

டெல்லியில் திருடன் ஒருவன் தனது தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பு குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள கடைகள் நிறைந்த தெரு ஒன்றில், கடந்த 7-ம் தேதியன்று 5 திருடர்கள் 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே இருந்த லட்சக்கணக்கிலான பணத்தை திருடி சென்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதுதொடர்பான காணொளி ஒன்றினை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், திருடன் ஒருவன் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு மைக்கேல் ஜான்சன் போல ஒரு குத்தாட்டம் போடுகிறார்.

ஆட்டம் முடிந்த உடனே, நடனம் ஆடிய அந்த திருடர் குல திலகம் வேகமாக தனது நண்பர்களையும் அழைத்து தொழிலை துவங்குவதை போன்று அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்