நிர்மலாதேவி விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா
81Shares
81Shares
lankasrimarket.com

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிசிஐடிக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரனையை சிபிசிஐடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் நிர்மலாதேவி பல முக்கிய விடயங்களை வாக்குமூலமாக இதுவரை அளித்துள்ளார்.

இந்நிலையில், நீண்டுகொண்டே செல்லும் இவ்வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதோடு செப்டம்பர் 24-க்குள் 3 கட்டமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்