தாயை கொன்று புதைத்து விட்டு நாடகமாடிய மகன்: 2 மாதங்களுக்கு பிறகு அம்பலமான உண்மை

Report Print Vijay Amburore in இந்தியா
158Shares
158Shares
lankasrimarket.com

மயிலாடுதுறை அருகே பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்து புதைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அருகே வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உய்யம்மாள். இவரது மகன் கலியமூர்த்திக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதுவரை நிம்மதியாக இருந்த வீட்டில் மருமகள் வந்த பின்னர் தான் சண்டையே ஆரம்பமாகியுள்ளது.

மருமகள் எது செய்தாலும் தவறு என மாமியார் கூற. மாமியார் எது செய்தாலும் தவறு என மருமகள் கூற, இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இவர்களது சண்டையை தினமும் தெருவே வேடிக்கை பார்த்து வந்துள்ளது.

இருவரால் மனமுடைந்த கலியமூர்த்த்து, பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக தனது தாயை அடித்து கொலை செய்து புதைத்து விட்டார். ஆனால் வெளியில் தனது தாயை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், கலியமூர்த்தியே தாயை கொலை செய்து புதைத்த உண்மையை கண்டறிந்தனர். இதனையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்