பயிற்சியின் போது இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா
462Shares
462Shares
lankasrimarket.com

தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகள் பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல், மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் எதிர்பாரதவிதமாக கிழே இருந்த சுவற்றில் முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் கீழே நின்ற போதும், அவர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்

அப்போது கீழே நோக்கி விழுந்த மாணவி சன்ஷேடில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் மாணவி கீழே விழுந்து இறந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்