பாகனை மிதித்து கொன்ற யானைக்கு உடல்நலக்குறைவு

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினி ஆத்திரத்தில் பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து கொன்றது.

கடந்த மே மாதம் 24ம் திகதி நடந்த இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அன்றைய தினமே கண்ணீருடன் மசினி, கஜேந்திரனை தேடுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து மசினியை கொட்டகைக்கு அழைத்து சென்று பராமரித்து வந்த நிலையில், இடது காலில் நீர்க்கட்டியால் அவதியுற்று வந்தது.

கால்நடை மருத்துவர் மனோகரன் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனது.

தொடர்ந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு மருத்துவர் கலைவாணன் மசினியை பரிசோதனை செய்யவுள்ளார்.

இந்நிலையில் அவரது அறிவுறுத்தலின்படி ஒரத்தநாடு பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தற்போது யானையை பராமரிக்கும் சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்