கருணாநிதியின் உடல் புதைக்கப்பட்டதன் காரணம் இதுவா? வெளியான தகவல்

Report Print Santhan in இந்தியா
833Shares
833Shares
lankasrimarket.com

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7-ஆம் திகதி உயிரிழந்தார்.

இவரது உடல் சென்னை மெரினாவில் முழு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று கருணாநிதி புதைக்கப்பட்டார் ஏன் எரிக்கப்படவில்லை, அதற்கான காரணம் இதுவா என்பது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கருணாநிதி ஒரு நாத்திகர், கடவுள் இல்லை என்று சொல்லும் இவர் மிகப் பெரும் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணாவை பின்பற்றி நடந்தவர்.

இவர் Isai Velalar சமுதாயத்தைச் சேர்ந்தவர், இவர்கள் குடும்ப வழக்கப்படி எரிக்கப்பட தான் வேண்டும் எனவும் ஆனால் கருணாநிதி, பெரியார் மற்றும் அண்ணாவை பின் தொடர்ந்ததால், எந்த ஒரு மத வழிபாட்டு முறையும் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி திமுக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரியார் மற்றும் அண்ணாவைப் போன்று புதைக்கவே ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னை வேப்பேரியில் பெரியாரின் உடலும், மெரினாவில் அறிஞர் அண்ணாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது கருணாநிதியின் உடல் அறிஞர் அண்ணா அவர்களை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி மெரினாவில் அதிமுக-வின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்