கருணாநிதியிடம் இருந்த கார்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in இந்தியா
913Shares
913Shares
Nallur-Travels-August-Promotion

5 முறை தமிழக முதல்வர் பதவியில் இருந்தாலும் கருணாநிதியின் பெயரில் ஒரு கார் கூட கிடையாது.

2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், தனது பெயரில் கார் எதுவும் இல்லை என்பதை கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும் டொயோட்டா அல்ஃபார்டு போன்ற ஒரு சில கார்களை கருணாநிதி பயன்படுத்தி வந்துள்ளார்.

7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா அல்ஃபார்டு கார், சொகுசு மினி வேன் ரகத்தை சேர்ந்தது. ஹைட்ராலிக் இருக்கை மூலம், கருணாநிதி எளிதாக ஏறி, இறங்க உதவும் வகையில், இந்த கார் ஸ்பெஷலாக கஸ்டமைஸ் செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைர்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வழிகளில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட டொயோட்டா அல்ஃபார்டு காரில், பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிகம். இந்த காரில் 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர லேன் மாறுவதை கண்காணித்து எச்சரிக்கும் லேன் மானிட்டரிங் சிஸ்டம், டிரைவரின் கண்களுக்கு புலப்படாத பகுதியில் வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கும் ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்ஸன் சிஸ்டம், ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் காரை போலவே, தேர்தல் பிரசாரங்களுக்கு அவர் பயன்படுத்தும் வாகனமும் பல்வேறு சிறப்புகளை வாய்ந்தது. இளைஞராக இருந்த காலகட்டத்தில் அவரது முழக்கம் எப்படி இருந்ததோ, அதன் வீச்சு சற்றும் குறையாமல், இந்த பிரசார வாகனத்தில் இருந்தும் எதிரொலித்தது.

கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி பயன்படுத்திய பிரசார வேனில், அவரின் சக்கர நாற்காலியை தூக்க உதவியாக, ஸ்பெஷல் ஹைட்ராலிக் லிப்ட் பொறுத்தப்பட்டிருந்தது. அவர் சுலபமாக ஏறி, இறங்குவதற்காக இந்த வசதி செய்யப்பட்டிருந்தது.

அவர் அமரும் சேர், 360 டிகிரியில் சுற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர வேன் முழுவதும் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டிருந்தது. வை-பை, ஸ்பாட் லைட்டுகள், ஸ்பீக்கர்கள் என சகல வசதிகளும் இந்த வேனில் ஏற்படுத்தப்பட்டன. கோவையை சேர்ந்த ஒரு பிரபலமான வாகன ரீ மாடலிங் கம்பெனி, இந்த வேனை தயார் செய்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்