வெள்ள அபாய எச்சரிக்கை: கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்படும் மான்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா
104Shares
104Shares
lankasrimarket.com

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கோழிக்கோடு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் கூட்டம் கூட்டமாக மான்கள் அடித்து செல்லப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறைந்தபட்சம் 60.மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதி வழியாக தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு சரக்குகள் ஏற்றி வந்த லாரி ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.