கருணாநிதியை அடக்கம் செய்த நேரத்தில் நடந்த அப்படியொரு சம்பவம்: நெகிழும் அதிகாரி

Report Print Deepthi Deepthi in இந்தியா
728Shares
728Shares
lankasrimarket.com

கருணாநிதியின் பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யா தனது தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்த வருகையில் தனது தாத்தாவின் சட்டையில் பேனா இல்லாததை பார்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் பேனாவை வாங்கியுள்ளார். மேலும் இந்த பேனாவை நான் உங்களிடம் கொடுக்க மாட்டேன், என் தாத்தாவை வைத்துள்ள பேழைக்குள் இந்த பேனாவை வைக்கப்போகிறேன் என கூறியுள்ளான்.

அந்த அதிகாரியும் சந்தோஷம் அடைந்து, இதை விட பேறு பாக்கியம் எனக்கு கிடைக்காது என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆதித்யான தனது தாத்தாவின் சட்டையில் அந்த பேனாவை வைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியடையை செய்தது.

கருணாநிதி சமாதி குழிக்குள் வைக்கப்பட்ட அந்தப் பேனாவுக்குச் சொந்தக்காரர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். மறுவாழ்வுத்துறையின் இயக்குநராகவும் பொதுத்துறையில் துணைச் செயலாளராகவும் இருக்கிறார்.

இதுகுறித்து அந்த அதிகாரி கூறியதாவது, இதனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தாத்தா சமாதிக்குள் இந்த பேனாவை வைக்க வேண்டும் என ஆதித்யா கேட்டவுன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இதை என்னுடைய நினைவில் வைத்துக்கொள்ள விரும்பி, அதற்கு அடையாளமாக இந்தப் பேனாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளட்டுமா? எனக் கேட்டேன். அவரும் சம்மதித்தார். உண்மையிலேயே நெகிழ்ச்சியான சம்பவமாக அது அமைந்தது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்