இனிமேலாவது திருந்தி வாழ் என்று சொன்ன கணவன்..மீண்டும் துரோகம் செய்த மனைவி: நடந்த விபரீத சம்பவம்

Report Print Santhan in இந்தியா
1434Shares
1434Shares
lankasrimarket.com

தமிழகத்தில் மனைவி வேறொருவருடன் உல்லாசமாக இருப்பதைக் கண்ட கணவர் அவரை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் ஐயப்பன். லாரி டிரைவரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஜெயந்தி, வர்ஷினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். ஐய்யப்பன் லாரி டிரைவர் என்பதால், பெரும்பாலான நாட்கள் வெளியூருக்கு சென்று வருவது வழக்கம்.

இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக சுகந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான்(25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. இதனால் சுகந்தி தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்து வந்து முஜிபுர் ரஹ்மானுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதை அறிந்த கணவன் ஐயப்பன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக, முஜிபுர் ரஹ்மானை அவரது உறவினர்கள் அழைத்து சென்றுவிட்டனர். இதனால்

சுகந்திக்கு அதே பகுதியில் உள்ள பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுகந்தி தான் தனியாக இருப்பதாக கணவரான ஐயப்பனிடம் கூறி, குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். கணவன் மீண்டும் தன்னுடன் வந்து தங்கினாலும், சுகந்தி பல ஆண்களுடனான தொடர்பை நிறுத்தவில்லை.

இந்த தகவல் ஐயப்பனுக்கு தெரியவந்ததால், சுகந்தியை திட்டியதுடன், இனியாவது திருந்து. நல்லபடியாக குடும்பம் நடத்துவோம். ஆண்களுடன் வைத்து உள்ள தொடர்பை நிறுத்திக்கொள் என கூறியுள்ளார்.

சுகந்தியும் இனி திருந்தி வாழ்வதாக கூறியுள்ளார்.

ஆனால் சமீபத்தில் சுகந்தி ஒருவருடன் உல்லாசமாக இருப்பதைக் நேரில் கண்ட ஐயப்பன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் சுகந்தியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி நேற்று முன்தினம் மாலை குழந்தைகளை விளையாடுவதற்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு, பின்னர், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சுகந்தியின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஐயப்பனை வேளச்சேரி பகுதியில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்