தம்பி ஸ்டாலினுக்கு சவால் விடும் அண்ணன் அழகிரி: நடக்கப்போவது என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா
672Shares
672Shares
lankasrimarket.com

கருணாநிதி மறைவையடுத்து திமுகவின் செயற்குழு கூட்டம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

இந்த கூட்டத்தில் திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படவிருக்கிறார். இதற்கிடையில் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அழகிரி தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கும்படியும் கேட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக இவரது சகோதரி செல்வியும் பேசியுள்ளார். அழகிரிக்கு பதவி வழங்காவிட்டால், பாஜக அவரை கையில் எடுத்துக்கொள்ளும், இதனால் கட்சிக்குள் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும், எனவே அழகிரிக்கு ஏதேனும் பொறுப்பினை வழங்கி அவரை உன்னுடன் வைத்துக்கொள் என ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு எடுக்கவிருக்கிறார் ஸ்டாலின். செயற்குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொதுக்குழுவில் அதற்கான ஒப்புதலை பெற முயற்சிக்கும் போது நான் யார் என்பதை ஸ்டாலினுக்கு காட்டுவேன் என்று அழகிரி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கலைஞர் மறைவுக்கு பிறகு சென்னையிலேயே தங்கி தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். என்னையும், எனது குடும்பத்தையும் தி.மு.கவில் இருந்து ஒழித்துக்கட்ட முயற்சித்தால் என்ன செய்து வேண்டுமானலும் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுப்பேன் என்று அழகிரி கூறி வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்