புதிய வசதியினை வழங்கும் ஜிமெயில்

Report Print Meenakshi in இன்ரர்நெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பெரும்பாலானவர்கள் கல்லூரியில் காலங்களில் ஜிமெயிலில் கணக்கினை தொடங்கும் போது வித்தியாசமாக பெயரில் தொடங்குகிறோம் என நினைத்து தொடங்கிவிடுவார்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய அனைவரிடமும் அதையே கொடுத்தும் விடுவார்கள். வேலை தேடி செல்லும் நிறுவனங்களிடம் அந்த கணக்கினை தகவல் பரிமாற்றத்திற்கு கொடுக்க இயலாது.

advertisement

இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒரு கணக்கினை தொடங்கி அதை தகவல் பரிமாற்றத்திற்கு என பயன்படுத்துவார்கள். ஒரே நேரத்தில் இரண்டு கணக்கினையும் கையாள இயலாது.

இதற்கு தீர்வாக ஜிமெயில் நிறுவனமானது புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

நமது பழைய ஜிமெயில் கணக்கில் உள்ள அனைத்து மெயில்களையும் புதிய கணக்கிற்கு மாற்றி கொள்ள இயலும்.

பழைய கணக்கிற்கு வரும் மெயில்கள் அனைத்தும் புதிய கணக்கிற்கு அனுப்பப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியினை பெற செய்ய வேண்டியவை

புதிதாக தொடங்கப்பட்ட ஜிமெயில் கணக்கில் சில மாற்றங்களை செய்தாலே போதுமானதாகும்.

முதலில் உங்களின் ஜிமெயில் கணக்கினை Open செய்து அதில் Settings செல்லவேண்டும்.

Settings-ல் க்ளிக் செய்து Accounts and Import என்பதை தேர்ந்தெடுக்கவேண்டும்.

அதில் Import mail and Contact என்பதை தேர்ந்தெடுத்து அதில் உங்களின் பழைய ஜிமெயில் கணக்கினை கொடுக்க வேண்டும். பின்னர் Continue கொடுக்க வேண்டும்.

பின் Agree கொடுக்கவேண்டும். இதை கொடுத்தவுடன் பழைய கணக்கிலிருந்து புதிய கணக்கிற்கு மெயில்கள் மாற்றப்படுவதற்கான பக்கம் காட்டப்படும்.

Import option வந்தவுடன் Import Contact, Import mail, Import New mail for next 30days ஆகிய மூன்றினையும் தேர்ந்தெடுத்து Start Import கொடுக்க வேண்டும்.

இதை கொடுத்தவுடன் அடுத்த 30 நாட்களுக்கு பழைய மெயிலுக்கு வரும் மெயில்கள் புதிய மெயிலுக்கும் வந்துவிடும்.

பழைய மெயிலினை புதிய மெயிலுடன் இணைக்க செய்ய வேண்டியவை

தொடர்ச்சியாக பழைய மெயிலிருந்து புதிய மெயிலுக்கு தகவல்களை பெறுவதற்கு சிறிய மாற்றங்களை ஏற்படுத்தினால் போதும்.

advertisement

பழைய மெயிலில் Settings சென்று Forwarding and POP/IMAP தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் POP Download பகுதியில் Enable POP for all mail கொடுக்கவேண்டும்.

Save Changes கொடுத்து sign out செய்துவிட்டு புதிய ஜிமெயில் கணக்கில் Settings செல்லவேண்டும்.

அங்கு Accounts and Import என்பதை தேர்ந்தெடுத்து Check email from other accounts-ல் Add an email account என்னும் பக்கத்தில் உங்களது பழைய கணக்கினை கொடுக்கவேண்டும்.

Next கொடுத்து Import emails from my other account (POP3) என்பதை தேர்ந்தெடுத்து மீண்டும் Next கொடுக்க வேண்டும்.

இங்கு உங்கள் கணக்கின் password கொடுக்கவேண்டும். பின் உங்களின் பழைய ஜிமெயிலில் உள்ள அனைத்து மெயில்களையும் delete செய்வதற்கு Leave a copy of retrieved messages on the server-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.

Label incoming messages என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் பழைய மற்றும் புதிய கணக்குகளுக்கு வரும் மெயில்கள் குழப்பத்தினை ஏற்படுத்தாமல் தனித்தனியாக சேகரிக்கப்படும்.

இது அனைத்தினையும் தேர்ந்தெடுத்தப்பின்னர் Add Account கொடுக்க வேண்டும். இதன் பின்னர் உங்களின் பழைய கணக்கானது புதிய கணக்குடன் இணைக்கப்பட்டுவிடும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments